காசா மறுசீரமைப்பு திட்டம் : ரஃபாவில் துருப்புக்களை நிலைநிறுத்தும் அமெரிக்கா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது காசா மறுசீரமைப்பு திட்டத்தின் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த அமைதிவாரிய திட்டத்தின் முதல் பணியாக ரஃபாவில் அமெரிக்க ஜெனரல் தலைமையிலான சர்வதேச நிலைப்படுத்தல் படையை நிலைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கமைய இந்தோனேசியா 8000 துருப்புக்களை முதற்கட்டமாக அனுப்ப உறுதியளித்துள்ளது. அத்துடன் காசாவில் ஹமாஸை நிராயுதபாணியாக்குவதே இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் மொராக்கோ, கஜகஸ்தான், கொசோவோ மற்றும் அல்பேனியாவும் வீரர்களை அனுப்ப உறுதியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப கிடைக்கப்பெற்ற 07 பில்லியன் நிதியை பயன்படுத்தவும் அவர் உறுதிப்பூண்டுள்ளார்.
இதேவேளை படைபலம் தேவையில்லை என்று தான் நம்புவதாகவும், மேலும் ஹமாஸ் ஆயுதக் குறைப்புக்கு உறுதியளித்துள்ளதாகவும் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




