வாழ்வியல்

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்

உலக மக்களை பாடாய் படுத்தி வரும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இது ஒரு முறை வந்துவிட்டால், இதனை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

பொதுவாக பழங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை அளிக்கின்றன. எனினும், சில பழங்களில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக உள்ளது. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில பழங்கள் இவைதான்

அன்னாசிப்பழம் (Pineapple)

அன்னாசிப்பழத்தில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இதை உட்கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும். இதன் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) மிக அதிகமாகும். இதன் காரணமாக இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகின்றது. அன்னாசிப்பழத்தை உட்கொள்வது இன்சுலின் அளவுகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தும். இது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை சீர்குலைக்கும்.

திராட்சை (Grapes)

திராட்சையில் அதிக அளவு பிரக்டோஸ் உள்ளது. இது சுகர் நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். திராட்சை சாப்பிடுவது சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தான அறிகுறியாகும். நீரிழிவு நோயாளிகள் திராட்சையை தவிர்ப்பது நல்லது, அல்லது இதை மிகக் குறைவாக உட்கொள்ள வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்ள்.

மாம்பழம் (Mango)

மாம்பழம் பழங்களின் ராஜா என்று அழைக்கபப்டுகின்றது. ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு ஆபத்தான பழமாகும். மாம்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது. ஆகையால், இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். மாம்பழத்தை உட்கொள்வது உடலில் குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாழைப்பழம் (Banana)

வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அதிகமாக உள்ளது. அதன் கிளைசெமிக் குறியீட்டு எண் மீடியம் முதல் ஹை வரை இருக்கக்கூடும். வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் திடீர் அதிகரிப்பு ஏற்படலாம். இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பழம் பொருத்தமற்றதாக கருதப்படுகின்றது.

ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை

நீரிழிவு நோயாளிகள் பழங்களை கவனமாக உட்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். அதிக சர்க்கரை அளவு கொண்ட பழங்களுக்கு பதிலாக, ஆப்பிள், பெர்ரி அல்லது பப்பாளி போன்ற குறைந்த ஜிஐ கொண்ட பழங்களை உட்கொள்ளலாம். பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடுவதற்கு முன் தங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இதன் மூலம் சுகர் நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான