இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு: தமிழரசுக் கட்சி போர்க்கொடி!

அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அத்தியாவசிய சேவைகள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கப்பெறவேண்டும். மக்களுக்கு இதனை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாகும்.

அதற்காக அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
தேசிய மக்கள் சக்தியினர் எதிரணியில் இருந்தபோது, அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை எதிர்த்தே வாக்களித்து வந்தனர்.

ஆனால் தற்போது அச்சட்டம் நீடிக்கப்படுகின்றது. எனவே, அச்சட்டம் நீடிக்கப்படுவதை நாம் ஏற்கவில்லை. அதனை கடுமையாக எதிர்க்கின்றோம்.” – என்றார் கவீந்திரன் கோடீஸ்வரன்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!