வேள்பாரி நாயகனாக தனுஷ்?
‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அப்படத்தில் நடிகராக தனுஷ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கரிடம் இது தொடர்பில் நடிகர் தனுஷ் பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இயக்குநர் ஷங்கரின் இந்தியன் – 2 திரைப்படம் வசூலில் தோல்வியடைந்தது.
அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் – 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படமும் தோல்வியையே சந்தித்தது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர், எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ’வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டு அதற்கான எழுத்து பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 2026, ஜூன் மாதம் ஆரம்பமாகும் என தெரியவருகின்றது.
இதில், நாயகனாக நடிகர் சூர்யா நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய திருப்பமாக இயக்குநர் ஷங்கர் இக்கதையை நடிகர் தனுஷிடம் சொன்னதாகவும் தனுஷ் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுசுக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் வரிசையில் இருப்பதால் ஷங்கருடன் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு இணையலாம் எனக் கூறப்படுகின்றது.




