ஐரோப்பா

ஹங்கேரிக்கு செல்லும் எரிவாயுக் குழாயை தகர்க்க சதித்திட்டம் – வெடிபொருட்கள் மீட்பு!

ஹங்கேரிக்கு ரஷ்ய எரிவாயுவைக் கொண்டு செல்லும் எரிவாயுக் குழாய் அருகே அதிக வெடிபொருட்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் உக்ரைன் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விடயத்தை உக்ரைன் மறுத்தாலும், உக்ரைன் காரணமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

செர்பியாவில் உள்ள டர்க்ஸ்ட்ரீம் குழாய் அருகே வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் விக்டர் ஓர்பன் (Viktor Orban) அவசரகாலப் பாதுகாப்புக் குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.

பல ஆண்டுகளாக ஐரோப்பாவை ரஷ்ய எரிசக்தியிலிருந்து துண்டிக்க உக்ரைன் முயன்று வருவதாக ஓர்பன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த வெடிபொருளுடன் தங்களைத் தொடர்புபடுத்தும் எந்தவொரு முயற்சியையும் உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!