உலகம் முக்கிய செய்திகள்

டொலருக்கு பதிலாக சீனாவின் யுவான் நாணயம் – பெய்ஜிங்கின் முயற்சி!

உலகின் அதிசக்தி வாய்ந்த நாணயத்தை உருவாக்கும் நடவடிக்கையில் சீன அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது பல தசாப்தங்களாக புழக்கத்தில் உள்ள டொலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் என நம்பப்படுகிறது.

ஆனால், பெய்ஜிங் செய்யத் தயங்கும் பரந்த கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இல்லாமல்  சீன யுவான் அந்நிய செலாவணி இருப்புக்களில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மந்தமான நுகர்வோர் தேவை மற்றும் ஐந்து ஆண்டு வீட்டுவசதி சரிவு இருந்தபோதிலும், சீனாவின் பொருளாதாரம்  பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

மேலும் இது கடந்த ஆண்டு உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீதத்தை உந்தியது என்று சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருப்பினும் சீனாவின் நிதி நிறுவனங்கள் முன்னேறிய பொருளாதாரங்களை விட பலவீனமாக உள்ளன. அத்துடன் நாட்டை விட்டு வெளியேறும் யுவானின் அளவிற்கு அரசாங்கம் கடுமையான வரம்புகளை நிர்ணயித்துள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போது உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் அரசியல் பதற்றங்கள், மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் ஆகியவை சீனாவின் கனவை நிறைவேற்ற உந்துதலாக அமையும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுடன் வலுவான வர்த்தக தொடர்புகளைக் கொண்ட நாடுகளிலோ அல்லது மேற்கத்திய தடைகளுக்கு ஆளான நாடுகளிலோ இந்த திட்டம் செயற்படுத்தப்படலாம் என நம்பப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
error: Content is protected !!