நேபாளத்தில் ஆற்றில் பாய்ந்த பேருந்து – 17 பேர் பலி!
நேபாளத்தில் திஷுலி ஆற்றில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போகாராவில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்குச் சென்ற பயணிகள் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில், நாட்டின் பாதுகாப்புப் படையினர் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.




