டெக்ஸாஸ் மாநிலத்தில் மனிதர்களிடையே பரவும் பறவை காய்ச்சல்!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன், கென்டக்கி மற்றும் மொன்டானா ஆகிய மூன்று அமெரிக்க மாநிலங்களில் உள்ள பாலூட்டிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகளை USDA உறுதிப்படுத்திய நிலையில், இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன.
நோயாளியின் முதன்மை அறிகுறி இளஞ்சிவப்பு கண் அதாவது கான்ஜுன்க்டிவிடிஸ் எனப்படும் நிலை ஏற்படும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அமெரிக்காவில் பால் பொருட்கள் தொடர்பாக எந்த பாதுகாப்பு கவலையும் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னதாக, கடல் பாலூட்டிகளிடையே பரவும் அதிக நோய்க்கிருமி ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (H5N1) வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.