இலங்கை செய்தி

இலங்கையில் மற்றுமொரு கோர விபத்தில் சிக்கிய பேருந்து – 14 பேர் காயம்

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

சேருநுவர – கந்தளாய் வீதியில், சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு அருகில் பேருந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் 9 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!