பொழுதுபோக்கு

அனிருத்தின் புது வழிப்பயணம்……!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், ‘Albuquerque Records’ என்ற புதிய இசை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

தமிழில் தற்போது ஜெயிலர் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தனது இசைப் பயணத்தில் புதிய கட்டத்தை இந்த நிறுவனத்தின் மூலம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படைப்பாற்றல், உரிமை மற்றும் கலாச்சார தாக்கத்தை மையமாகக் கொண்டு இசை வணிகத்தை உருவாக்கும் எனது பயணத்தின் முக்கிய தொடக்கமாக ‘அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்’ அமைகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது திரைப்பட மற்றும் திரைப்படம் அல்லாத இசைப் படைப்புகளுக்கான பிரதான தளமாக இந்த நிறுவனம் செயல்படும் என்றும், புதிய மற்றும் திறமையான கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிப்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய இசை நிறுவனத்தின் வணிக மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை, தலைமை இயக்க அதிகாரியாக பி. கவுஷிக் மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் தொடங்கியுள்ள இந்த நிறுவனம், இந்திய இசைத்துறையில் புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் முக்கிய தளமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!