பொழுதுபோக்கு

பல வருடங்கள் காத்திருந்த துருவ நட்சத்திரம்… நாளை வெளியாகும் சூப்பர் அப்டேட்

நடிகர் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது துருவ நட்சத்திரம்

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு, சில பிரச்சினைகள் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டில் மீண்டும் துவங்கப்பட்டு, தற்போது தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ளது துருவ நட்சத்திரம். படத்தில் விக்ரமுடன் ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். முன்னதாக படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்திருந்த நிலையில், தற்போது கதையில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் காரணமாக அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் வெளியான பாடலில் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம்பெறவில்லை.

இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் கடந்த சில மாதங்களாக இணையதளத்தில் உலவி வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் படக்குழு மேற்கொள்ளாமல் இருந்தது.

இந்நிலையில் படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் சென்சார் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை காலை 11 மணியளவில் இந்தப் படத்தின் புதிய அறிவிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இரு பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் நாளை காலை ரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content