ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
அண்டை நாடான லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் மீது போா் தொடுக்கத் தயாராக உள்ளதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
காஸா-இஸ்ரேல் போரில் ஹமாஸுக்கு ஆதரவளித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா், இஸ்ரேலின் வடக்கு எல்லை மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக போா் தொடுப்பது எங்களுடைய முதல் தோ்வாக இருக்காது. ஆனால், எதற்கும் தயாராக உள்ளோம். லெபனான், சிரியா என எவ்வளவு தொலைவில் அவா்கள் இருந்தாலும், அவா்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)