இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்!

ரஷ்ய விமான சேவை இலங்கைக்கான நேரடி விமான சேவையை இன்று புதன்கிழமை (01) ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் மிகப் பெரிய விமான சேவையான அசூர் ஏர் (Azur Air) இந்த சேவைகளை முன்னெடுத்துள்ளது. இன்றைய தினம் காலை 332 பயணிகளுடன் முதலாவது நேரடி விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

முதலாவது நேரடி விமானம் நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் கண்டிய நடனத்துடன் வரவேற்கப்பட்டதோடு, அவர்களுக்கு இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் உலகின் தலைசிறந்த தேயிலைக்கு இணையான சிலோன் தேநீர் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.

ரஷ்யாவில் வெனுகோவ், டோல்மோசேவ், க்ரானோயார்ஸ்க் மற்றும் சென் பீட்டர்ஸ்பர்க் ஆகிய பகுதிகளிலிருந்து வாரத்திற்கு நான்கு விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content