பிரான்ஸில் கணவனை கொலை செய்த மனைவி – சுற்றிவளைத்த பொலிஸார்
பிரான்ஸில் Dunkerque நகரில் ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவரது மனைவி பொலிஸாரால்கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் கடந்த வார இறுதியில் இடம்பெற்றிருந்தது. ஆசிரியராக கடமையாற்றும் ஒருவரது சடலம் கடந்தவார இறுதியில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.
பல தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டிருந்தார் எனவும், சம்பவ இடத்தில் இருந்து கத்தி மற்றும் கையுறைகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இக்கொலைச் சம்பவத்தில் முதலாவது குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட அவரது மனைவி தேடப்பட்டு வந்திருந்தார்.
இந்நிலையில், அவரது 37 வயதுடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவரைக் கொலை செய்துவிட்டு அவர் தனது ஒன்றரை வயது பிள்ளையுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
(Visited 5 times, 1 visits today)