வட அமெரிக்கா

ராணுவ ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் 2 அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கைது

சீனாவை சேர்ந்தவர் ஜிஞ்சாவோ வெய். 22 வயதான இவர் அமெரிக்க கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். லாஸ் ஏஞ்சல்சின் வென்சுரா கடற்படை தளத்தில் பணி புரிந்து வந்தவர் வென்ஹெங் ஜாவோ (26).

இருவரும் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், போர் கால பயிற்சிகள், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் நவீன தளவாடங்கள் குறித்து சீனாவுக்கு உளவு சொன்னதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.இதைத்தொடர்ந்து இருவரையும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுகுறித்து சான்டியாகோவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. அதில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் 2 மாலுமிகளும் சீனாவுக்கு உளவு சொன்னதாக வாதாடினார். சீனாவில் உள்ள தனது தாயை கடந்த கிறிஸ்துமஸ் அன்று வெய் சந்தித்ததாகவும் அங்கே வைத்து சீன அதிகாரிகளை அவர் சந்திந்திருக்கலாம் என்று கூறினார்.

மேலும் பணி ஓய்வுக்கு பின்னர் சீன அரசின் சலுகைகளை பெறவும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவரின் அனைத்து செலவுகளையும் சீன அதிகாரிகள் ஏற்றதாகவும் அவர் வாதிட்டார். இதற்கு அவருடைய தாயும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்றார்.

கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரிகள் நிரபராதிகள் என்று எதிர்தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்