இலங்கை

குடும்ப பெண்ணுக்கு WhatsApp ஊடாக பாலியல் சேட்டை-சமூர்த்தி அதிகாரிக்கு விளக்கமறியல்

WhatsApp செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு ஆணுறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (8)கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பிரதான சந்தேக நபரான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான சாய்ந்தமருது 4ம் பிரிவினை சேர்ந்த ஆதம்பாவா முஹம்மட் நழீம் (45 ) என்பவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த திங்கட்கிழமை (7)அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வசிக்கின்ற 2 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணிடம் தையல் மெசின் உட்பட பல சலுகைகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது ஆணுறுப்பினை புகைப்படம் எடுத்து WhatsApp செயலியின் ஊடாக குடும்ப பெண்ணின் கைத்தொலைபேசிக்கு தொடர்ச்சியாக அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்