முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ரஷ்யா!

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு இன்று (07.08) வெளியானது.
இதன்படி லூனா -25 என்ற லேண்டரை சோயுஸ் என்ற ரொக்கெட் மூலம் ஏவவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த ரொக்கெட்டானது வரும் 11 ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1976 க்குப் பிறகு மொஸ்கோவின் முதல் சந்திரப் பயணமாக இது இருக்கும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)