அரசாங்கத்தின் அனைத்து கட்சிகளையும் நாளை வருமாறு ரணில் அழைப்பு
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கான விசேட கூட்டமொன்றை நாளை (14) மாலை ஐந்து மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மொனராவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அழைப்பிதழ்கள் இன்று (13) உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் அலுவலகத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் நேற்று (12ம் திகதி) ஜனாதிபதி அலுவலகத்தில் இதேபோன்ற கூட்டம் ஒன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் இதில் பங்கேற்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில், நாளை நடைபெறவுள்ள கூட்டத்திற்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், மொட்டு கட்சியின் சில அரசியல் பிரதிநிதிகள் தமது கட்சிக்கான உத்தியோகபூர்வ அழைப்பை விடுக்காததால் பிரதிநிதிகள் நேற்றைய கூட்டத்திற்கு வருவதை தவிர்த்துள்ளனர்.
இதேவேளை, நாமல் ராஜபக்ச எம்.பி., நேற்று இடம்பெற்ற குறித்த சந்திப்பிற்கு தனித்தனியாக அழைக்கப்பட்டிருந்ததோடு, பிரதிநிதிகளை தனித்தனியாக அழைக்காமல், கட்சியின் ஊடாக உத்தியோகபூர்வ அழைப்பை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.