ஆஸ்திரேலியாவில் நடுவீதியில் வன்முறை: இரு சிறுமிகள் கைது!
ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் பேருந்து சாரதி, பயணி மற்றும் இரு அமெரிக்கா சுற்றுலாப் பயணிகள்மீது தாக்குதல் நடத்திய இரு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இந்த வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பேருந்திற்குள் தொடங்கிய இந்த மோதல், அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தெருவில் இருந்த வெளிநாட்டுப் பயணிகளைத் தாக்குமளவிற்கு நீடித்துள்ளது.
இத்தாக்குதலில் எவருக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவிற்குக் காயங்கள் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.
சம்பவ இடத்தில் வைத்தே சிறுமிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 வயது சிறுமி மீது மூன்று தாக்குதல் குற்றச்சாட்டுகளும், 17 வயது சிறுமி மீது ஒரு தாக்குதல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்குப் பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




