பிரித்தானியா மற்றும் பிரான்ஸின் கூட்டு நடவடிக்கை – ஹோர்முஸ் ஜலசந்திக்கு செல்ல தயாராகும் போர் கப்பல்!
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்காக, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தலைமையிலான பன்னாட்டுப் பணிக்குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த கடற்பகுதிக்கு HMS டிராகன் போர் கப்பல், டைஃபூன் ஜெட் விமானங்கள், கண்ணிவெடி தேடும் கருவிகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை அனுப்ப இவ்விரு நாடுகளும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி நீர்வழிப்பாதையில், கண்ணிவெடிகளை அகற்றுவது, வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாப்பது மற்றும் பத்திரங்களைப் பத்திரப்படுத்துவது ஆகிய முக்கியப் பணிகளை பன்னாட்டு பணிக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு மாதத்திற்கு முன்பு போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்த போதிலும், இரு நாடுகளும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவரையொருவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், போர் நிறுத்தப்பட்ட பின்னரே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹோர்முஸ் ஜலசந்தியில் நுழையும் எந்தவொரு போர்க்கப்பலுக்கும் “தீர்க்கமான மற்றும் உடனடியான பதிலடி” கொடுக்கப்படும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்த பணிக்குழுவை நியமித்துள்ளன.




