இந்தியா முக்கிய செய்திகள்

தமிழக தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களிப்பு – இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கைது!

ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் “ஏமாற்றுத்தனமாக” வாக்களித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விமானத்தில் ஏற முயன்ற பத்து வெளிநாட்டினர் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களின் ஆட்காட்டி விரலில் மை இருந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சட்டவிரோதமாக வாக்களித்தமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீது ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை, இங்கிலாந்து மற்றும் கனடாவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!