உலகம் செய்தி

பிரதமர் பதவி விலக வேண்டும்: லேபர் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்து!

உள்ளாட்சிசபைத் தேர்தலில் லேபர் கட்சிக்கு ஏற்பட்ட கடும் பின்னடைவை தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் Keir Starmer கடும் தலைமைத்துவ சவாலை எதிர்கொண்டுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என 20 வரையான லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

” பிரதமர் Keir Starmer ஆல்தான் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவர் கட்சியை தொடர்ந்து வழிநடத்தினால் நாங்கள் முற்றிலும் அழிந்துவிடுவோம்.” என்று லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

” வாக்காளர்கள் லேபர் கட்சியை வெறுக்கவில்லை. ஆனால் பிரதமர்மீது அதிருப்தி உள்ளது.”என மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், லேபர் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பிரதமருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!