இலங்கை செய்தி

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 07 ஆம் நாள் வெளியான புதிய தகவல்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தையின் என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 04 என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 07 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (04) நடைபெற்றது.

இதன்போது , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் குழந்தை ஒன்றின் என்பு கூட்டு தொகுதி உட்பட 4 என்பு கூட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 250 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 247 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சில சான்று பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அகழ்ந்து எடுக்கப்படும் என்றும், அதன் பின்னரே அவை தொடர்பில் தெரிவிக்கப்படும் என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!