இந்தியா செய்தி தமிழ்நாடு

எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்தார் விஜய்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

தஞ்சை உட்பட 4 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய சூழல் உதயமாகும் என்ற நம்பிக்கை உள்ளதால், அடுத்தக்கட்ட நகர்வுகளை தொடர்பில் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்திவருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.

10 வரையான தொகுதிகளில் 2ஆம் இடத்தில் உள்ள தவெக , முதலிடம் வருவதற்கு 1000 வரையிலான வாக்கு வித்தியாசமே உள்ளது. அங்கும் வெற்றி உறுதி என தமிழக வெற்றிக் கழகம் நம்புகின்றது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. 65 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

தி.மு.க. 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவே தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றார்.

அதேவேளை, தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கி அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்கு சதவீதத்தை பெற்ற எம்ஜிஆரின் அதிமுக.,வை மிஞ்சி, விஜயின் தவெக முதலிடத்தை பிடித்துள்ளது.

தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) முதல்முறையாக களத்தில் இறங்கியது. இதனால் அதிக எதிர்பார்ப்பு அக்கட்சி மீது ஏற்பட்டது.

1 மணி நிலவரப்படி தவெக மட்டும் 38 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி துவங்கி 1977 சட்டசபை தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியபோது 30.4 சதவீத ஓட்டுகளை பெற்றார்.

கடந்த 49 ஆண்டுகளாக அதன் பிறகு எத்தனையோ புதிய கட்சிகள் தேர்தலில் களமிறங்கின. ஆனால் அக்கட்சிகள் 10 சதவீத ஓட்டுகளைக் கூட எட்டவில்லை.

அப்படியிருக்கையில் எம்ஜிஆரின் 30.4 சதவீத சாதனையை கட்சி துவங்கி இரண்டரை ஆண்டில் முதல் தேர்தலில் தகர்த்து சாதித்துள்ளார் விஜய். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!