உலகம் செய்தி

துப்பாக்கி ஏந்திய புகைப்படத்துடன் ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப்!

ஈரான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது எனவும் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்ரூத் பக்கத்தில் பொதுவாக எழுத்து மூலமாக தனது கருத்துகளைத் முன்வைக்கும் ட்ரம்ப், இம்முறை புகைப்படம் ஒன்றையும் இணைந்துள்ளார்.

குண்டுகள் வெடிக்கும் பின்னணியில், கையில் அதிநவீன துப்பாக்கியுடன் திரைப்பட கதாநாயகன் போல் ட்ரம்ப் அதில் காட்சியளிக்கின்றார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல்சுற்று அமைதி பேச்சு தோல்வியில் முடிவடைந்தது.

இரு தரப்பினருக்கும் இடையில் 2ஆம் சுற்று சந்திப்பை நடத்த வைப்பதற்கு பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது. எனினும், அந்த முயற்சி இன்னும் வெற்றியளிக்கவில்லை.

இரு தரப்பினரும் நிபந்தனைகளை முன்வைத்துவருகின்றனர்.
இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!