உலகம்

அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்து ; 2 பேர் பலி

அவுஸ்திரேலியாவின்  Parafield  விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று இன்று புதன்கிழமை (29) விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்ததோடு 11 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த விமானம் தரையிறங்குவதற்கு முயன்ற போது விமானக் கூடாரத்துக்குள் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

Diamond DA42 என்ற இரட்டை எஞ்சின் அமையப்பெற்ற சிறிய ரக பயிற்சி விமானமே விபத்தில் சிக்கியுள்ளது.

விமானத்துக்குள் இருந்த விமானியும் பயணி ஒருவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, விமானக்கூடாரத்துக்குள் விமானம் மோதியபோது அந்த இடத்தில் இருந்த தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் 11 பேர் பலத்த தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானம் மோதி விபத்துக்குள்ளானபோது அப்பகுதியில் பெரும் கரும்புகை சூழ்ந்ததையடுத்து, விமான நிலைய ஊழியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்து இடம்பெற்றதையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Mahi

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!