ஈரானில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
போர் தொடங்கிய காலத்திலிருந்து ஈரானில் குறைந்தபட்சம் 21 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் தரவுகளின் அடிப்படையில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் உளவாளிகளுக்கு எதிராக ஈரான் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
இதே காலகட்டத்தில் ஈரானில் 4,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானிய அதிகாரிகளின் இத்தகைய கொடூரமான அடக்குமுறைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
போர் சூழலுக்கு மத்தியிலும் ஈரான் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவது மிகுந்த கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.





