அரசியல் இலங்கை செய்தி

தையிட்டி விவகாரத்தில் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது!

“NPP ஆட்சிக் காலத்தில் விகாரைத் தேவைகளுக்காக மக்களின் காணிகள் ஒருபோதும் சுவீகரிக்கப்படமாட்டாது” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியாகத் தெரிவித்தார்.

காணி அளவீட்டுப் பணிகளின் போது ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் அது தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

“நாம் ஏற்கனவே பலமுறை கூறியது போல, மக்களின் காணிகளை அவர்களிடமே மீள ஒப்படைப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

தையிட்டி விகாரையை மையப்படுத்தி அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கு இல்லை. ஆனால், சிலர் தமது அரசியல் இலாபத்துக்காகப் போலியான கருத்துக்களைப் பரப்பி, தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.

விகாரைக்காகக் காணிகளை அபகரிக்கும் நோக்கில் திஸ்ஸ விகாரைக் காணிகள் அளவீடு செய்யப்படவில்லை. மாறாக, காணிகளை விடுவித்து இந்தப் பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.” – என்றார்.

தேவையற்ற குழப்பங்களை விளைவிக்காமல் பொறுப்புடன் செயற்படுமாறு அரசியல் தரப்பினரைக் கேட்டுக்கொண்ட அமைச்சர், மக்களின் காணிகளை விடுவிக்கும் பணிகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் மேலும் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!