பஞ்சாப் அணியை பந்தாடியது ராஜஸ்தான்!
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 40 ஆவது லீக் ஆட்டத்தில் Rajasthan Royals அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Punjab Kings அணிக்கு பிரப்சிம்ரன் சிங் (59) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (29) ஜோடி அதிரடியான தொடக்கத்தை வழங்கியது.
பின்னர் வந்த அணித் தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 30 ஓட்டங்கள் எடுக்க, ஆட்டத்தின் போக்கை மாற்றிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், வெறும் 22 பந்துகளில் 62 ஓட்டங்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) விளாசினார்.
குறிப்பாக கடைசி ஓவரில் அவர் காட்டிய அதிரடியால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 222 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
223 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணிக்கு, வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்து அதிரடி தொடக்கம் தந்தார்.
அவருக்குத் துணையாக யஷஸ்வி ஜெய்சவால் 27 பந்துகளில் 51 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இருப்பினும், நடுவரிசையில் யுஸ்வேந்திர சஹால் தனது மாயாஜால சுழலில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் ஆட்டம் பஞ்சாப் பக்கம் சாய்வது போல் தெரிந்தபோது, டோனோவன் ஃபெரைரா (52) மற்றும் இம்பாக்ட் பிளேயராக வந்த {பம் துபே (31) ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டனர்.
இவர்கள் இருவரும் இணைந்து 19.2 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி 228ஃ4 ஓட்டங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.
6 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது.





