இலங்கை செய்தி

NPP அரசுக்கு தலையிடியாக மாறியுள்ள’ இணைய மோசடி’!

நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவிய இணையக் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்ட சம்பவம் குறித்து சர்வதேச நாணய நிதியம் IMF அவதானம் செலுத்தியுள்ளது.

ஆங்கில இணைய ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்புத் துறையின் கணினி அமைப்புகளுக்கு அனுமதியின்றி அணுகப்பட்டதை உறுதி செய்து இலங்கை நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம்.

இந்த முக்கிய நிகழ்வை நாங்கள் கவனத்தில் கொண்டு, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிதி, ஆஸ்ரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் இலங்கை விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது.

இதற்கிடையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இது பெரும் தலையிடியாக மாறியுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் பதவி விலக வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்திவருகின்றன.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!