இலங்கை செய்தி

அம்பியூலன்ஸ் சாரதியின் கவயீனத்தினால் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்?

திருகோணமலை, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸின் சாரதி அதனை மெதுவாக ஓட்டிச் சென்றுள்ளார் என தேரர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால் பொலிஸ் உத்தியோகத்தரை காப்பாற்ற முடியாமல் போனதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹதிவுல்வெவ – தெவனிபியவ இந்ராராம விகாரையின் விகாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன தேரரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மஹதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த சுரங்க திஸாநாயக்க என்ற பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பு காரணமாக கடந்த 19ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அம்பியூலன்ஸ் வண்டியில் நோயாளியை ஏற்றிச் செல்லும் போது வைத்தியர் அதில் பயணிக்கவில்லை எனவும், நோயாளி பற்றி வைத்தியருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அவர் முற்சக்கர வண்டியில் சென்று அம்பியூலன்ஸில் ஏறினார் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பொலிஸ் உத்தியோகத்தரான சுரங்க திஸாநாயக்கவின் மரணத்திற்கு அம்பியூலன்ஸ் சாரதி உள்ளிட்டவர்கள் பொறுப்புகூறவேண்டும்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். அம்பியூலன்ஸ் சாரதியை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!