இலங்கை செய்தி

GSF படைப்பிரிவு குறித்து ஐ.நாவில் இலங்கை ஆராய்வு!

ஹைட்டிக்கு haiti முன்மொழியப்பட்ட கும்பல் ஒடுக்குதல் படையுடன் Gang Suppression Force (GSF) இணைந்து சேவையாற்றுவது தொடர்பில் இலங்கை ஆராய்ந்துவருகின்றது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தொடர்பான பேச்சுவார்த்தை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினருக்கும் , ஐ.நா மூத்த அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர், நடவடிக்கை ஒத்துழைப்புக்கான பிரதிப் பொதுச் செயலாளர் அதுல் காரே, செயல்பாட்டு ஆதரவுத் துறையின் (DOS) வழங்கல் தொடர் முகாமைத்துவ அலுவலகத்தின் (OSCM) கீழ் இயங்கும் சீருடைத் திறன் ஆதரவுப் பிரிவின் (UCSD) பணிப்பாளர் மைக்கேல் முலிங்கே கிட்டிவி மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பொறிமுறைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

முன்மொழியப்பட்ட கும்பல் ஒடுக்குதல் படையின் கீழ், இலங்கைப் படைகளை ஹைட்டிக்கு அனுப்பவிருப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!