மருதானை நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டது!
பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிகா ரயில் இன்று காலை (24) தடம் புரண்டுள்ளது.
வடுவ ரயில் நிலையம் அருகே குறித்த ரயில் சேவை தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கடலோர ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





