எமது மண்ணிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும்: லெபனான் பிரதமர் திட்டவட்டம்!
லெபனான் மண்ணிலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேறினால் மட்டுமே எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியும் என்று லெபனான் பிரதமர் Nawaf Salam திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
லெபனான் எல்லையில் பாதுகாப்பு மண்டலங்கள் உருவாக்கப்படுவதை ஏற்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
எனவே, அமைதி பேச்சின்போது இது தொடர்பில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவின் தலையீடு அவசியம் எனவும் லெபனான் பிரதமர் Nawaf Salam இடித்துரைத்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களைக் களைவது என்பது ஒரு நீண்டகாலச் செயல்முறை என்றும், இதில் அவசரம் காட்ட முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.





