ட்ரம்பின் கருத்துக்கு ஈரானிய அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள ஈரான் தொடர்பான கருத்துகள், ஈரானிய அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
ட்ரம்ப், ஈரானிடமிருந்து முக்கிய சலுகைகள் பெறப்பட்டதாக கூறியதுடன், அணு திட்டம், ஹோர்முஸ் நீரிணை மற்றும் பொருளாதார தடைகள் குறித்து பல்வேறு கூற்றுகளை வெளியிட்டார்.
அவரது கூற்றுகளின்படி, குண்டுவீச்சில் சேதமடைந்த அணு தளங்களில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம், இரு நாடுகளும் இணைந்து அகற்றி அமெரிக்காவிற்கு மாற்றப்படும் என்றும், ஈரான் தனது மண்ணில் யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை தற்போது திறந்திருப்பதுடன், அது மீண்டும் மூடப்படாது என்றும் அவர் கூறினார்.
இதே வேலை, ஈரானின் துறைமுகங்கள் மீது அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், இந்த அனைத்து கூற்றுகளையும் ஈரானிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ட்ரம்பின் கருத்துகளை உண்மைக்கு புறம்பானவை எனக் குற்றம் சுமத்தி, அவற்றால் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போர்நிறுத்த காலம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால், அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.





