இந்திய துணை ஜனாதிபதியை 19 ஆம் திகதி சந்திக்கிறது தமிழரசுக் கட்சி!
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (19) இலங்கை வருகின்றார்.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.
இருதரப்பு நல்லுறவு மற்றும் பொதுவான அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பாக இதன்போது பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணியளவில், கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில், இந்திய துணை ஜனாதிபதி இராதாகிருஷ்ணனுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது.
அதே தினம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளையும் இந்திய துணை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.





