தொடர்கிறது வெற்றிநடை: முதலிடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்!
IPL 2026 தொடரின் நேற்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் Punjab Kings அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்தத் தோல்வியின் மூலம் Mumbai Indians அணி தனது 4-வது தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை.
மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களைப் பெற்றது.
196 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 16.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்களை எடுத்து இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.





