விபத்தில் தாயும், மகளும் பலி: யாழில் சோகம்!
யாழ். சாவகச்சேரி கனகம்புளியடி – புத்தூர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும், மகளும் பலியாகியுள்ளனர்.
இப்பெருந்துயர் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளனர். அவர்களுள் தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு சாரதியும், பிறிதொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.





