தனது வாரிசுக்கு போர் பயிற்சி வழங்கும் வடகொரிய ஜனாதிபதி!
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது மகளுடன் இணைந்து ஒரு புதிய வகை ராணுவ டாங்கியை இயக்கும் போர் பயிற்சியைப் பார்வையிட்டார்.
சுமார் பதிமூன்று வயதுடைய அவரது மகள் ஜூ ஏ, அந்தப் போர் வாகனத்தை நேரடியாக ஓட்டிப் பழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ராணுவ நிகழ்வுகளில் அவர் தொடர்ந்து பங்கேற்பது, கிம் ஜாங் உன்னிற்குப் பிறகு அவரே அடுத்த தலைவராக உருவெடுப்பார் என்பதைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நவீன கால ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை எதிர்க்கும் வகையில் தனது நாட்டின் தரைப்படை ஆயுதங்களை நவீனமயமாக்கும் முயற்சியில் ஜனாதிபதி கிம் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த ராணுவப் பயிற்சி வடகொரியாவின் தற்காப்பு மற்றும் தாக்குதல் வலிமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.






