அதிரடியாக குறைவடைந்த தங்க விலை
தங்கத்தின் விலை இன்றைய தினம் அதிரடியாக குறைவடைந்துள்ளது.
இதன்படி, இன்று (19) நண்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 13,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.
இதன்படி 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றைய தினம் 362,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை 9,000 ரூபாவினால் குறைந்திருந்ததுடன், நண்பகல் வேளையில் மேலும் 4,000 ரூபாவினால் தங்கம் விலை குறைந்துள்ளது.
நேற்று (18) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 374,400 ரூபாவாகக் காணப்பட்டதுடன், இன்று அது பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, நேற்று 407,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 394,000 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.





