இலங்கை செய்தி

அமெரிக்காவின் சிறப்பு தூதுவர் இலங்கை விஜயம்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர் Sergio Gor, இன்று (19) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் உயர்மட்ட சந்திப்புகளுக்காக அவர் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.

இலங்கையில் இருக்கும் காலப்பகுதிக்குள் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர், அமெரிக்க-இலங்கை உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அரசாங்கத்தின் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார்.

பாதுகாப்பு தரப்பினருடனும் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன என்று தெரியவருகின்றது. இலங்கையில் சந்திப்புகளை முடித்த பின்னர் மாலைதீவு செல்வார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!