உலகம் செய்தி

ஈரானுடனான போரால் அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனம் உச்சம்!

ஈரானுடனான போருக்கு மத்தியில் பாதுகாப்புச் செலவினங்களை சுமார் 1.5 டிரில்லியன் (£151bn) டாலராக உயர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.

ஒரு வலிமையான ராணுவத்தை உருவாக்கி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே அவர் இந்த ஒதுக்கீட்டை கோரவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

ஈரான்மீதான போர் ஆரம்பமான முதல் வாரத்தில் மட்டும் அமெரிக்கா போருக்காக பெருந்தொகையை செலவிட்டுள்ளது. எனினும், இது தொடர்பான துல்லியமான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ட்ரம்பின் மேற்படி கோரிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம். எனினும், மத்திய கிழக்கு போருக்கு அமெரிக்காவுக்குள் எதிர்ப்பு இருப்பதால் சில தடைகளை அவர் இது விடயத்தில் எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!