அமெரிக்காவின் திட்டம் தோல்வி – ஈரான் ஆட்சி சரியவில்லையென தகவல்
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி (Ali Khamenei) கொலை செய்யப்பட்ட பின்னர், அந்நாட்டின் ஆட்சி மிக விரைவாக சிதைந்து விடும் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்க தரப்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதுவரை ஈரானிய ஆட்சி சரிந்து வருகிறது என்பதற்கான தெளிவான ஆதாரம் எதுவும் இல்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் (Donald Trump) வலுவான தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். அதனால், கமேனி
உயிரிழந்த பின்னர் வெனிசுலாவில் ( Venezuela) போன்று அரசியல் மாற்றம் ஈரானில் ஏற்படும் என்று அவர் கருதியிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், ஈரானின் அரசியல் அமைப்பு மற்றும் ஆட்சிக் கட்டமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய புரிதல் குறைவாக இருந்திருக்கலாம் என்பதையும் இது காட்டுகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.





