திருமலையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது!
திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் விசாரணை அதிகாரியொருவர் இந்த தகவலை வெளியிட்டார்.
திருகோணமலை பிரதான வீதியில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் குறித்து ஆணை குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக இரண்டு சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் திருகோணமலை தலைமையக காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக லஞ்ச ஊழல்கள் விசாரணை அலுவலக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 20 ஆயிரம் ரூபாவே லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது.





