போர்ச் சூழல்: மத்திய கிழக்கு சுற்றுலாத்துறைக்கு பேரிழப்பு!
போர்ச் சூழலால் மத்திய கிழக்கின் சுற்றுலாத்துறை நாளொன்றுக்கு 600 மில்லியன் டொலர்வரை பேரிழப்பை சந்தித்து வருகின்றது என தெரியவருகின்றது.
the World Travel and Tourism Council (WTTC) மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
வான்வழிப் போக்குவரத்து முடக்கம் மற்றும் சர்வதேசப் பயணிகளின் வருகை குறைவு ஆகியவையே இதற்கான முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
வான்வெளி மூடப்பட்டதால் கே.எல்.எம் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் தங்களின் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.
பாதுகாப்பு சார்ந்த நெருக்கடிகள் நீங்கிய பின், பயணிகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பதன் மூலம் சில மாதங்களிலேயே பழைய நிலையை அடைய முடியும் என துறைசார் நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இக்கட்டான இந்த சூழலிலும் சுற்றுலாத்துறையின் நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்ய சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், மத்திய கிழக்கில் இன்று 13 ஆவது நாளாகவும் போர் தொடகின்றது.





