உலகம்

ஈரானின் அடுத்த உச்சத் தலைவர் யார்? : பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை!

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி உயிரிழந்துள்ளதை தொடர்ந்து அந்த பதவியை ஈடு செய்ய அவருடைய மகனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பொறுப்பான மூத்த மதகுருமார்கள் இணைந்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தற்போதைய சூழலில் அடுத்த தலைவரின் பெயர் அறிவிக்கப்பட்டால் அவர் இஸ்ரேலிய துருப்புகளின் இலக்காக மாற வாய்ப்புள்ளதாகவும், இதன்காரணமாக அந்த விடயங்கள் இரகசியம் காக்கப்படுவதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) வாரிசு அடிப்படையில் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நிபுணர்களின் சபை என்று அழைக்கப்படும் மதகுருமார்கள், காலையிலும் மாலையிலும் இரண்டு மெய்நிகர் கூட்டங்களை நடத்தியதாகவும், இதன்போது மேற்படி ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!