ஈரானின் ஜனாதிபதி அலுவலகம் உட்பட முக்கிய வளாகங்களில் தாக்குதல்
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில், ஜனாதிபதி அலுவலகம் உட்பட முக்கிய வளாகங்களில் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அத்துடன் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி ஆறு அமெரிக்க சேவை உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈரானின் பதிலடி தாக்குதல் நடவடிக்கை தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் லெபனானில் கூடுதல் மூலோபாய பகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு காணப்படுவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 787 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது





