ஐரோப்பா செய்தி

அலி கமெனியின் உயிரிழப்புக்கு பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் இரங்கல்

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமெனி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (Jon Healy) இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும் ஈரான் மீது எந்தவொரு நேரடி நடவடிக்கையிலும் ஈடுபடவில்லையென கூறப்படுகிறது.

பிராந்தியத்தில் உள்ள பிரித்தானிய குடிமக்களின் பாதுகாப்புக்கே உடனடி முன்னுரிமையளிக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நேற்று போர் ஆரம்பமானத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் அவசர பாதுகாப்பு கூட்டத்துக்கும் தலைமை தாங்கினார்.

இதேவேளை அரசாங்கம் ஈரான் மீது தாக்குதல்களை ஆதரிக்கின்றதா என்பதை தெளிவாக கூற முடியாது என டோரிகள் கட்சியின் தலைவர் கெமி படேனோக் (Kemi Badenoch) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பஹ்ரைன், கட்டார், குவைட், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ளவர்கள் தேவையேற்படிக் தஞ்சம் கோரவும் அரசின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணமாக விமானப் பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே சரிபார்த்து, பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!