Rebuliding Sri Lanka நிதியத்திற்கு கலிபோர்னியா விகாரையிடமிருந்து 21,500 டொலர் நன்கொடை
Rebuliding Sri Lanka நிதியத்திற்கு அமெரிக்காவின் தெற்கு கலிபோனியாவிலுள்ள சன்வெலி மைத்ரி விகாரையிடமிருந்து 21500 அமெரிக்க டொலர் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நன்கொடை சேகரிப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 04 ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தன்று, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சன்வெல்லி மைத்ரி விஹாரையின் விஹாராதிபதி கலாநிதி அபரெக்கே புஞ்சசிறி தேரரின் உத்தரவின் பேரில், இந்த நன்கொடை இலங்கையின் தூதர் ஜெனரலுக்கு வழங்கப்பட்டது.





