செய்தி

ஜெர்மனியில் வழமைக்கு திரும்புமா விமான சேவைகள்? எதிர்பார்ப்பில் பயணிகள்!!

ஜெர்மனியில் தடைப்பட்டிருந்த விமான சேவைகள் இன்று வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்கள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்திருந்தனர்.  இதன்காரணமாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

வெரினிகுங் காக்பிட் (Vereinigung Cockpit) மற்றும் யுஎஃப்ஒ (UFO) தொழிற்சங்கங்கள் தலைமையிலான தொழில்துறை நடவடிக்கை குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தியது.

இதன்படி பெரும்பாலான விமானங்கள் பிராங்பேர்ட்டின் (Frankfurt) முக்கிய மையத்தில் தரையிறக்கப்பட்டன. இதனால் சுவிஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல தயாராக இருந்த பயணிகள் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.

அவர்களுக்காக மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!